விசேட செய்திகள்

செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

நியூசீலந்து மசிபல்கலைக் கழகத்தில் சார்ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி

 

நியூசீலந்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-

நியூசீலந்து மசிபல்கலைக் கழகத்தில் General SirJohn Kotelawala DefenceUniversity மாணவர்களுக்கு பயிற்சி


 

நியூ சீலந்து மசி பல்கலைக் கழகத்திற்கும் ( Massy University ) ஸ்ரீ லங்கா சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகத்திற்குமிடையில்(KDU ) அண்மையில் கைச்சாதிடப் பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பேரில் சார் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நியூ சீலந்தில் பயிற்சிநெறிகள் வழங்கப்படவுள்ளன.

சார் ஜோன் கொத்தலாவல பல்கலைக் கழகத்தில் இலங்கையின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களே கல்வி பயில்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த நியூ சீலந்துக் கல்விமான்கள் குழு இந்த ஒப்ந்தத்தை நிறைவேற்றி நாடு திரும்பியது. 

 

Vice-Chancellor Steve Maharey

 

நியூ சீலாந்தின் பாதுகாப்பு சேவைகள் கற்கை நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் டோனி நொரிஸ் தகவல் கணித விஞ்ஞானத்துறை நிலைய கற்கைகள் பணிப்பாளர் பேராசிரியர் மார்க்பிரவுன் ஆகியோர் மசி பல்கலைக் கழகத்  துணைவேந்தர் ஸ்டீவ் மஹாரி தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு இது தொடர்பான விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன் இந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டனர். 

பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், நில நீர்ப்பாவனை, பேண  தகைமை முகாமைத்துவம் (Sustainabilty  ),மானுட நேயம்  பற்றிய கற்கைகளில் சேர் ஜோன்  கொத்தலாவல பல்கலைக் கழகம் ஆர்வம் காட்டியதாக பேராசிரியர் மஹாரி தெரிவித்துள்ளார்.அதே வேளை  கொழும்புப் பல்கலைக் கழகத்துடனும் கைச்சதிடப்பட்ட  இவ் வைபவத்தின்போது பரஸ்பர நலன்கள் மற்றும் மாணவர் தொடர்புப் பரிமாற்றம் கூட்டு ஆய்வுகள், கற்பித்தல் , ஒருங்கிணைத்த கற்பித்தல்  பற்ற்யும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.