செய்திகள்

இணைப்புக்கள்

உங்கள் அபிப்பிராயங்கள்

News Articles

பொதுநலவாய நாடுகள் அமைப்பு சர்வாதிகாரத்தை அங்கீகரிக்கின்றதா என மங்கள கேள்வி

 

பொதுநலவாய நாடுகள் அமைப்பு சர்வாதிகாரத்தை அங்கீகரிக்கின்றதா என மங்கள கேள்வி

 

பொதுநலவாய நாடுகள் அமைப்பு சர்வாதிகாரத்தை அங்கீகரிக்கின்றதா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் பொதுநலவாய நாடுகள் கொள்கைகளும் கோட்பாடுகளும் பின்பற்றப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதிகார முறைமையிலான ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெற்றால் அது சர்வதிகாரத்தை பொதுநலவாய நாடுகள் அமைப்பு அங்கீகரிப்பதாகவே அர்த்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறைச் சாத்தியமான மாற்றங்களையே பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கையிடமிருந்து எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதுடன் ஜனநாயக விழுமியங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்த வேண்டுமென அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிற்கு, மங்கள சமரவீர கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
 
நீதித்துறைச் சார் நியமனங்களும், இடமாற்றங்களும் அலரி மாளிகையின் உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் ஆபத்துக்களை சந்திக்கும் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தை வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
சீன உதவியுடன் இணையதளங்கள் முடக்கப்படுவதுடன் உளவு பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஒரு சில பரிந்துரைகளை அமுல்படுத்த கால அவகாசம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்ற போதிலும், பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு காணப்படும் அர்ப்பணிப்பு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 

 

 

 

 
.