வணக்கம்!
அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து உருவாக்கிய ஒரு புதிய ஊடகத் தொழில்நுட்பத்தினூடாக உங்களைச் சந்திப்பதில் மிகப் பெரும் மகிழ்வடைகிறோம்.
இணையம் என்கிற இந்தத் தொழில்நுட்பம் அச்சு ஊடகத்தையும் இலத்திரனியல் ஊடகத்தையும் இணைக்கிற ஒரு புதிய வடிவம் என்பது மட்டுமல்ல, ஜனநாயக நிலைப்பட்ட ஜனநாயகத்திற்கான சாத்தியப்பாடுகளை அதிகப்படுத்திய ஆழப்படுத்திய ஒரு ஊடக வடிவமும் கூட.
ஜனநாயகத்தின் அதிகப்படுத்திய சாத்தியப்பாடு என்பது, ஊடகவியலாளர்களுடைய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. அதேவேளை, பல்வேறு கருத்துக்கள் வெளிப்படவும், கருத்தாடப்படவும் வாய்ப்பளிக்கும. கூடவே மக்களுடைய பதிலளிப்பதற்கான, பங்கு பற்றுதலுக்கான, மாறுபட்ட அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதற்கான உரிமைகளையும் உத்தரவாதம் செய்து விடுகிறது. இது பொதுமக்கள் பங்கேற்கும், அவர்களுடைய நலன்களைப் பிரதிபலிக்கும் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஊடகத்துறை ஒன்றின் வளர்ச்சிக்கு முதற்படியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
ஊடகத்துறையில் மனிதர்களால் கண்டு பிடிக்கப்பட்ட தொழில்நுட்பப் பயன்பாடும், மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி சார்ந்த அனுபவிப்பும் பெருமளவில் அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த பிரிவினருக்கே சேவகம் செய்பவையாக மாற்றப்பட்டிருந்தது. இதுவே இதுவரையான ஊடக வரலாற்றின் பெரும்பகுதியாக இருந்து வந்திருக்கிறது. அந்த வரலாற்றினுள்ளும் ஒரு சில நிறுவனங்களும் ஒரு சில ஊடகவியலாளர்களும் மக்களுடைய குரலாக அவர்களுடைய எண்ணங்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வருபவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை நாம் மறந்து விடலாகாது.
அதன் தொடர்ச்சியாக மக்களுடைய குரலாக அவர்கள் பங்கேற்கிற, அவர்களுடைய அபிலாசைகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கின்ற ஒரு ஊடகமாக குளோபல் தமிழ் நியூஸ் உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இதற்காக நாம் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதனையும் நாமறிவோம். குறிப்பாக கொழும்புக்கு சற்று வெளியேயோ அல்லது வடக்கு கிழக்கிற்கோ இணையம் என்கிற இந்த ஊடகம் சென்று சேர்வதில் உள்ள நெருக்கடி சொல்லும் தரமன்று.
மின்சாரம் இல்லாத தொலைபேசி செயற்படாத கணணிகள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத அந்தச் சூழ்நிலையுள் அந்த மக்கள் இதில் பங்கேற்பது, அவர்களுடைய குரலாக இது இருப்பது என்பது ஒரு சவாலான விடயம் என்பதையும் நாம் அறிவோம்.
இதனால் தான் குளோபல் தமிழ் நியூஸ் என்பது இணையத்திற்கப்பாலும் சாத்தியமாகக் கூடிய வேறு வழிகளையும் தேட ஆரம்பித்திருக்கிறது.
குளோபல் தமிழ் என்பதில் இரு விடயங்கள் உள்டங்குகின்றன. ஒன்று குளோபல். மற்றையது தமிழ்.
இலங்கைத் தமிழர்கள் என்றிருந்த நிலைமை இன்றில்லை. போர் இலங்கையிலிருந்து அவர்களைத் தூக்கி வீசியெறிந்திருக்கிறது. விளைவாக உபகண்டத்தில் தமிழ்நாட்டிலும், ஐரோப்பாவின் பல தேசங்களிலும், அவுஸ்திரேலியாவிலும, அமெரிக்காவிலுமாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். ஆக இன்றைய தமிழ் அடையாளம் என்பது புவியியல் எல்லைகளைத் தாண்டி இருக்கிறது.
இலங்கையில் இருக்கும் தமிழர்களையும் - அதாவது தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்போரையும் இவ்வாறு புலம் பெயர்ந்துள்ளோரையும் இணைப்பதற்கு இணையத்தைவிட இலகுவான, வாய்ப்பான ஊடகம் எதுவுமிருப்பதாய்த் தெரியவில்லை. அதேவேளை இவ்வாறு உலகம் முழுதும் பரவி வாழ்பவர்களை அவர்களுடைய தமிழ் வாழ்வை இணைப்பது தமிழ் அடையாளம். ஆக சர்வதேச ரீதியில் பரம்பலுக்குள்ளாகியுள்ள தமிழ்ர்களை, அந்தத் தமிழ் வாழ்வை இணைக்கும், படைக்கும், விமர்சிக்கும், கேள்வியெழுப்பும் தளமும் களமுமாக இருக்கும் ஒரு செய்தி நிறுவனத்தின் பெயராக குளோபல் தமிழ் நியூஸ் இருப்பது பொருத்தமானதல்லவா?
எங்கள் முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். அது வெற்றி பெறுவதென்பது உங்கள் ஒவ்வொருவருடைய பங்கு கொள்ளலிலும் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்றும் நாம் நம்புகிறோம். அந்த வகையில் இது ஒரு பொது மக்கள் ஊடகமாக, பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்றும் ஒரு ஊடகமாக வளர உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறது.
குளோபல் தமிழ் நியூஸ் என்கிற இந்தத் தளம் உங்களுடைய தளம். உங்களுடைய பிரச்சினைகளையும, விருப்பு வெறுப்புக்களையும், தேவைகளையும், நெருக்கடிகளையும், அவலங்களையும் பேசப் போகிற ஒரு தளம். சுருங்கக் கூறின் துயரத்தையும் நெருக்கடிகளையும் அவலத்தையும் பகிர்ந்து கொள்கிற ஒரு தளம்.
மனித சமூகம் தன் வரலாற்றில், முன்னால் ஒரு காலடியை வைக்க இத்தளம் களமாகவும் பயன்பட வேண்டும் அதுவே எமது அவா. அந்த வகையில் வர்க்க, இன, மத, சாதி, பால, பிரதேச ரீதியிலான எவ்வகையான அசமத்துவங்களையும் அது ஏற்றுக்கொள்ளாது. அவ்வாறான அசமத்துவங்களுக்கெதிராக அதன் குரல் ஓங்கி ஒலிக்கும். நீதியானதும் நடுநிலையானதும் சுதந்திரமானதுமான ஒரு ஊடகமாக அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தும். ஏனெனில் அது மக்களாகிய உங்களுடைய அபிலாசைகளையல்லவா பிரதிபலிக்கிறது.
இறுதியாக இதன் உருவாக்கத்தில் எம்மோடு ஒத்துழைத்த ஒவ்வொருவரையும் நெஞ்சிலிருத்திக் கொள்ள வேண்டிய தருணமிது. அவர்களின் ஆதரவு இல்லாமல் எம்முடைய முதல் காலடி சாத்தியமாகியிருக்கப் போவதில்லை. குறிப்பாக இந்தத் தளத்தை வடிவமைத்து அதற்குரிய பெயரைப் பதிவு செய்து அதனை இயக்கி உங்களை
வந்தடையச் செய்த தன்னை வெளிப்படுத்த விரும்பாத எனது நண்பர் மறக்க முடியாதவர். கணனித் துறையில் கால்பதித்துள்ள அவர் எந்த எதிர்பார்ப்புக்களும் இன்றி எம்மை இந்த இணைய உலகில் இணைப்பதில் பெரும் பங்கு வகித்தவர். அவர் உள்ளிட்ட அனைவருக்கும் மீளவும் எமது நன்றி.
ஆசிரியர்
| gtbc.fm |
-
2ஆம் இணைப்புதமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு‐ படங்கள் ‐ தேர்தல் விஞ்ஞாபனம் 2010 ‐ இணைப்பு
-
4ஆம் இணைப்பு ‐ அனோமா பொன்சேக்கா இன்று நேரடியாக மக்களைச் சந்தித்து பொன்சேக்காவிற்காக பிரசாரம் ஜெனரல் சரத் பொன்சேக்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி அனோமா மனுத்தாக்கல்‐
-
இந்தியாவின் தாளத்திற்கு நாம் ஆடுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
-
யுத்தம் முடிவடைந்த பின்னும் தமிழ்மக்களின் அவலம் தொடர்வதாக இந்திய வெளியுறவுச் செயலரிடம் TNA தெரிவிப்பு ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
-
ஏறாவூர் புளினதலாராம விகாரை கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது‐
-
ஜனாதிபதியின் புதல்வரினால் ஆரம்பிக்கப்பட்ட யூத் எப்.எம் புதிய அலை வரிசை விளம்பரங்களில் தமிழ்க் கொலை‐
12 March 10 02:10 pm (BST)
அது என்ன பாஷையில் வழங்குவீர்கள்?சுதந்திரம் கொடுப்பீர்களா?அந்நியச் செலவாணிகளை சம்பாதிக்கத் தான்????
12 March 10 01:51 pm (BST)
யோகா, பொன்னி விதான்டாவாதம் பேசமாட்டாள்,அதே நேரம் நீரும் கல்கியும் சொல்வதை சரி என்று முளுவதையும் ஏற்கமுடியாது,கஜேந்திரகுமார் திருமலையிலும் யாழ்ப்பானத்திலும் சம்மந்தரையும் மாவையையும் சுரேசையும் தோற்க்கடிப்பதே எங்கள்நோக்கம் என்பதின் மூலம் நான் மகிந்தாவுக்கும் டக்லஸ்க்கும் கருனாவுக்கும் பிள்ளையானுக்கும் சளைத்தவன் இல்லை என்று சொல்வதை நீர் ஏற்கிறீரா?
12 March 10 01:15 pm (BST)
யோகா குஞ்சு
