25 July 10 07:53 am (BST)
சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.
பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் அவர் நடக்க வேண்டியிருப்பதாக, அவரது உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையைச் சென்றடையும் அவர் பரிஸ் ஊடாக ஜெனீவா நோக்கி நடந்து செல்ல இருக்கின்றார்.
சிவந்தனை உற்சாகப்படுத்தவும், தமிழ் மக்கள் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கவும் அவருடன் இணைந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் நடக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் லண்டனில் கறுப்பு ஜுலை இரவுநேரப் பேரணியில் 2,000 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு : சிவந்தனின் நடைபயணம் ஆரம்பித்தது.
2010‐07‐24 11:53:29
பிரித்தானிய தமிழர் பேரவை கறுப்பு ஜுலையை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடத்திய பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
· சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்,
· தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள், பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும். முகாம்களிலுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும்,
· மனித உரிமைகளை மதிக்கும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி இடம்பெற்றது. பேரணியைத் தொடர்ந்து லண்டனில் இருந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்துள்ளது.
முன்னதாக இரவு 10:00 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள ரொட்ஹில் (Tothill) வீதியில் இருந்து ஆரம்பித்த பேரணி, 10:45 அளவில் பிரித்தானியப் பிரதமரது இல்லமான இல.10 டவுணிங் ஸ்றீற்றை (Downing Street) சென்றடைந்தது.
அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானிய இளையோர் அமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசு, அக்ட் நவ் (Act now), பிரித்தானிய தமிழர் பேரவை, தென் தமிழீழத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதியுமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, மற்றும் நடை பயணத்தை ஆரம்பித்துள்ள சிவந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டோர் ஆரம்பத்தில் தமது கோரிக்கைகளை முன்வைத்து பாடல்களைப் பாடிச்சென்றனர். பின்னர் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால் இரவு நேரம் என்றும் பாராது சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனக் குரலெழுப்பிச் சென்றனர்
கறுப்பு ஜுலை என்பதாலும், தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கைகளை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தவும் இரவு நேரம் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும், குழந்தைகளைத் தாங்கிய தாய்மார், சிறியவர்கள், பெரியோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் மெழுகுதிரிகளையும், ஒளிவிளக்குகளையும், பாதாகைகளையும், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஏந்திச் சென்றதுடன், தமது கோரிக்கைகளை அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் பிரித்தானியா மற்றும் ஏனைய நாட்டு மக்களிற்கு வழங்கிச் சென்றனர்.
பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற உரைகளையடுத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்தது. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இந்த நடை பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்த அதேவேளை, அங்கு கூடியிருந்த மக்கள் சிவந்தனுக்கு தனது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இவர் பிரித்தானியக் கடற்கரையான டோவரைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்ஸின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், அங்கிருந்து பரிஸ் நோக்கி நடந்து, பின்னர் ஜெனீவா நோக்கிச் செல்ல இருக்கின்றார்.
சிவந்தனுடன் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து உறவுகள் இணைந்து நடந்து செல்ல வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 6ஆம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) பிற்பகல் 2:00 மணியளவில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும், மனுக் கையளிப்பு நிகழ்விலும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழ் மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ள கீழுள்ள அமைப்புக்களைத் தொடர்புகொள்ளுமாறு மக்கள் அன்பாகக் கேட்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய தமிழர் பேரவை +44(0)20 8808 0465
தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானியா
ஐரோப்பிய தமிழர் ஒன்றியம்
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்ஸ் (+33 (0)6 11 72 59 78 / +33 (0)6 25 90 85 93)
சுவிஸ் ஈழத்தமிழரவை (+41 (0) 79 309 06 69)
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
டென்மார்க் தமிழர் பேரவை
நோர்வே ஈழத்தமிழர் அவை
லண்டனில் பேரணியும், ஐ.நாவை நோக்கிய நடை பயணமும்
கறுப்பு ஜுலை நாளில், இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், போர்க் குற்ற விசாரணை மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் இன்றிரவு மாபெரும் பேரணி இடம்பெற இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
இந்தக் கோரிக்களை முன்வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை வெஸ்ற்மினிஸ்ரர் தேவாலயத்திற்குப் பின்புறமாக இருந்து பேரணி ஆரம்பித்து, பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை சென்றடையவுள்ளது. இந்த இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து அதே கோரிக்கைகளை முன்வைத்து ஜெனிவா ஐ.நா சபை நோக்கி சிவந்தன் நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், டோவர் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், பரிஸ் நகரம் ஊடாக சுவிற்சர்லாந்து ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.
இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருப்பதுடன், அங்கு ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றல்) 6ஆம் நாள் பிற்பகல் 2:00 மணியளவில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு நடைபெறவுள்ளது.
சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன. அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.
அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு ஐரோப்பாவிலுள்ள பல தமிழ் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
| gtbc.fm |
-
18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க இன்று சவப்பெட்டி ஊர்வல ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது
-
2ம் இணைப்பு ‐ இராணுவ கிளர்ச்சி ஓன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது – சர்வாதிகார பாதையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக சிறை செல்லவும் தயார் ‐ சரத்பொன்சேகா
-
18 வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன
-
18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் ‐ படங்கள் இணைப்பு
-
3ஆம் இணைப்பு‐ மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாதது – விஜய் குமார் சிங் ‐ இந்திய இராணுவத் ஜெனரல் விஜேகுமார் சிங், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திப்பு‐
-
உருத்திரபுரம் மீண்டும் உயிர் பெறும் கிராமம்‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்
09 September 10 01:25 am (BST)
பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி 18ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டுமென கூறும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயா கடைசியாக இடம்பெற்ற அவசரகாலச்சட்ட வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை? என்பதை தெளிவுபடுத்துவாரா?
09 September 10 12:22 am (BST)
ரெம்ப குழம்பி போய் இருக்கிறோம்
08 September 10 10:25 pm (BST)
EPRLF இல் என்னக்கு பிடித்தமானது அவர்கள் முஸ்லிம்களை அனுசரித்து தலைவர் அஷ்ராபுடன் சேர்ந்து ஒரு தமிழ் இனமாக வாழ முடியும் என்று சாதித்து காடியவர்கள்



