29 July 10 08:01 am (BST)
குருபரன் ‐ வன்னியில் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளில் தற்போது பாரிய சிக்கலினை எதிர்கொண்டுள்ளது சாந்தபுரம் செல்வபுரம் முறிகண்டி இந்துபுரம் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம். உங்களுடைய இந்த நிலத்தினை அரசாங்கம் தற்போது கையகப்படுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்த தற்போதைய நிலைமை என்ன?
குரல் ‐ 1977ஆம் ஆண்டிலிருந்து இங்கு தான் கிராமங்களை உருவாக்கி நாங்கள் வசித்து வருகிறோம். 32 வருடங்களுக்கு மேலாக இந்த மக்கள் அங்கு குடியிருக்கிறார்கள். இந்தப்பிரதேசம் ஒரு பின்தங்கிய பிரதேசம் என்றாலும் அந்த மக்களுடைய உழைப்பால் அவை இன்று செழிப்புள்ள கிராமங்களாக இருக்கின்றன. 2008ஆம் ஆண்டு போரினால் இடம் பெயர்ந்து 2009ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்து இன்று செட்டிக்குள முகாமில் தான் இருக்கிறோம். எங்களை மீள்குயேற்றுவதற்கான அறிவிப்பு ஏப்ரல் 26ஆம் திகதி வந்தது. மக்கள் தயாராக இருந்த போதும் அன்று காலையிலேயே மீள் குடியேற்றம் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதன் பிறகு நூற்றுக்கணக்கான மக்களாக நாம் சென்று பிரதேச செயலாளருடன் பேசிய போது இராணுவம் தான் உங்களது மீள் குடியேற்றத்தைத் தடை செய்துள்ளது என்று தெரிவித்து அதற்கான கடிதத்தையும் எமக்குக் காட்டினார்.
ஆதன் பிறகு இது தொடர்பில் நாம் பல கடிதங்களை ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனப் பலதரப்பினருக்கு அனுப்பி வைத்தோம். அவை தொடர்பில் எந்தவித பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. அதன்பிறகு இந்த மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத் தொடருக்காக ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்தார். அதன் போது நாம் நேரடியாகச் சென்று அவரிடம் எமது மகஜரைக் கொடுத்து எமது பகுதிகளில் எம்மைக் குடியேற்றும்படி கோரினோம். நாங்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் நிலங்களை எம்மிடமிருந்து எடுக்கப் போவதாக தகலவ்கள் கிடைத்திருக்கிறது. தயவு செய்து எமது காணிகளில் எம்மை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுங்கள் என்று அவரிடம் கோரினோம். அதன் போது உங்களுடைய காணிகளை நாம் ஒருபோதும் எடுக்க மாட்டோம். உங்களது காணிகளிலேயே உங்களை நாம் மீள் குடியேற்றம் செய்வோம். தற்சமயம் அங்கு கண்ணிவெடிகள் காணப்படுகின்றன. அவை அகற்றப்பட்டதும் உங்களை உங்களது காணிகளிலேயே குடியேற்றுவோம் என்று உறுதியளித்துவிட்டுப் போய்விட்டார்.
அதன்பிறகு பிரதி மீள்குடியேற்ற அமைச்சரான கருணா எனப்படுகிற விநாயகமூர்த்தி முரளிதரன் வந்த போதும் அவரிடமும் நாங்கள் எமது மகஜரைக் கொடுத்து எங்களை எமது காணிகளில் மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரினோம். அவரும் சொன்னார் தான் இது தொடர்பில் கதைத்து நல்ல முடிவை அறிவிப்பதாக.
அதன்பிறகு 15 நாட்களுக்கு முன்பதாக சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமுறிகண்டி யோவிலுக்கு வருகை தந்திருந்தார். அதன் போதும் அவரைச் சந்தித்து இது தொடர்பான மகஜரைக் கொடுத்து எம்மை மீள்குடியேற்றுமாறு கோரியிருந்தோம். இது தான்தற்போது எங்களுக்கு எஞ்சியிருக்கும் சொத்து. இப்போது நாங்கள் வளர்த்த மரங்களையெல்லாம் இராணுவத்தினர் புல்டோசர் போட்டு அழிக்கிறார்கள். தயவு செய்து அவற்றைத் தடுத்தி நிறுத்தி எங்களது காணிகளை எங்களுக்குப் பெற்றுத்தாருங்கள் என்று கோரினோம். ஆனால் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை.
இதற்குப் பிறகு நாங்கள் பிரதேச செயலாளரிடம் போய்க் கதைத்தோம். அவர் சொன்னார் நீங்கள் அரச அதிபரிடம் போய்க் கதையுங்கள் என்று. அதனால் நாங்கள் அரச அதிபரிடம் போய்க் கதைத்தோம். இவ்வளவு மகஜர் கொடுத்திருக்கிறோம் எதற்கும் எந்தப் பதிலும் இல்லை. எங்களை எங்களுடைய காணிகளில் மீள் குடியேற்றம் செய்யுங்கள் என்று கேட்ட போது தான் அவர் எங்களுக்குச் சொன்ன பதில் உங்களுடைய காணிகள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வேறு இடத்தில் காணிகள் கொடுக்கும்படி எனக்குப் பணிப்புரை வந்திருக்கிறது. அதன்படி உங்களுக்கு வேறு இடங்களில் காணி பார்க்கச் சொல்லி பிரதேச செயலாளரிடம் சொல்லி இருக்கிறேன் என்றார். இது தான் எங்களுடைய நிலைமை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். எங்களுக்கு இப்போது இருக்கும் சொத்து என்று சொன்னால் இது மட்டும் தான். தற்போது இதனையும் பறித்தெடுக்கிறார்கள்.
குருபரன் ‐ எவ்வளவு குடும்பங்கள் இவ்வாறு அங்கு உள்ளன?
குரல் ‐ ஏ9 வீதிக்கு மேற்குப் பக்கம் கொஞ்ச குடும்பங்களை குடியமர்த்தி உள்ளார்கள். ஏ9 க்கு கிழக்குப் புறமான காணிகளைத் தான் இப்போது எடுத்திருக்கிறார்கள். தி;ருமுறிகண்டி, இந்து புரம் சாந்த புரம் என்ற இந்தக்கராமங்களில் 1200க்கு மேற்பட்ட குடும்பங்கள் இங்கு இருக்கின்றன. இந்தக்குடும்பங்களின் காணிகளதை; தான் தற்போது தாம் எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
குருபரன் ‐ சாந்தபுரம் பகுதியில் ஏற்கெனவே குடியமர்த்தப்பட்ட மக்கள் விரட்டியடிக்கப்பட்டதாகச் சில தகவல்கள் சொல்கின்றனவே?
குரல் ‐ அவர்களை இரண்டு மாதங்களுக்கு முன்னரேயே கொண்டு வந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைத்திருந்தார்கள். அதன்பிறகு அவர்களை போனமாதம் கொண்டு வந்து சாந்த புரத்திலுள்ள ஒரு பாடசாலையில் வைத்திருந்தார்கள். அந்தப்பாடசாலையில் இருந்து ஒரு பகுதி மக்களை 10ஆம் வீதிக்கு அருகில் குடியேற்றினார்கள். ஏனையவர்கள் தங்கள் தங்கள் காணிகளில் போய் குடியேறினார்கள். அந்த மக்களைத் தான் இன்று கிளிநொச்சி பிரிகேடியர் வந்து உங்களுக்கு இங்கு காணியில்லை. எல்லோரும் முகாமுக்குப் போங்கள் என்று கலைத்திருக்கிறார். அந்த மக்கள் தற்போது மீளவும் முகாம்களில் இருக்கிறார்கள்.
குருபரன் ‐ ஏற்கெனவே முல்லைத்தீவு பிரிகேடியர் வந்து அங்கிருந்த மக்களுக்குச் சொன்னாராமே நீங்கள் உங்களுடைய காணிகளில் இருக்கலாம் என்று. இன்று வந்தது கிளிநொச்சி பிரிகேடியரா?
குரல் ‐ ஆம் கிளிநொச்சி பிரிகேடியர். நாங்கள் இங்குள்ள பிரிகேடியர் மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் போய்க் கேட்டால் அவர்கள் எங்களுக்குச் சொல்வார்கள் நாங்கள் பொது மக்களுடைய காணிகளை எடுக்க மாட்டோம் என்று. நீங்கள் போய் உங்கள் அரச அதிபரிடமும் பிரதேச செயலாளரிடமும் போய்க் கேளுங்கள் அவர்கள் தான் இதற்குப் பொறுப்பு என்று சொல்வார்கள். தாங்கள் காணி எடுக்க மாட்டம் என்று தான் இன்று வரையும் சொல்கிறார்கள்.
குருபரன் ‐ நீங்கள் இதுவரை எல்லோரிடமும் முறைப்பாடு கொடுத்திருக்கிறீர்கள். அரசாங்கத்தில் உள்ள இரண்டு தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் கருணாவிடம் முறையிட்டிருக்கிறீர்கள். அதற்கும் மேலாக ஜனாதிபதி வருகை தந்த போது அவரிடமும் முறையிட்டிருக்கிறீர்கள். ஆனால் தற்போது அரச அதிபர் காணிகள் இராணுவத்தால் எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். எனவே உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை எதுவாக இருக்கப் போகிறது. அவர்கள் தரும் காணிகளில் போய் குடியேறப் போகிறீர்களா? உங்களுடை நோக்கம் என்னவாக இருக்கிறது.?
குரல் ‐ நாங்கள் நேற்று அரச அதிபரிடம் தெளிவாகத் தான் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லைஎன.
நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தான் தொடர்புகளை வைத்தீருக்கிறோம். அதன் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா இதுதொடர்பாக உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தகுதிhன சிலரைத் தெரிவு செய்து தருமாறு கேட்டிருந்தார். இது தொடர்பாக நாங்கள் சிலரைத் தெரிவு செய்து உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதேவேளை ஏ.9 வீதிக்கு கிழக்காக உள்ள கிராம மக்களின் பிரதிநிதிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிவசக்த்தி ஆனந்தன் சிறீதரன் ஆகிறோர் இன்று வவுனியாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கு முன்னதாக இவர்கள் சாந்தபுரம் பகுதிக்கும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து நிலமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே மீழக் குடியிருந்த மக்களை பலாத்காரமாக அப்புறப்படுத்திய இராணுவம் உழ வுயந்திர வண்டியில் பொருட்களை ஏற்றிச் செல்வதனை தாம் நேரில் இன்று பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஜீரீஎன்னிற்குத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ கிளிநொச்சி விஜயத்தின்போது சொந்தக்காணிகளில் குடியேற்றுவதாக உறுதியளித்த போதும் அதனை மீறுவதாக தெரிவிக்கும் மக்கள் தாம் சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவும் தயார் எனத் தெரிவித்துள்ளனர். அல்லது படையினர் தம்மைச் சுட்டுக் கொன்ற பின்போ நஞ்சூட்டிக் கொன்ற பின்போ இந்தக் காணிகளில் குடியேற முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி, சாந்தபுரம் மக்கள் தொடர்ந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்‐ சாந்தபுரத்தை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவிற்கு மாற்ற முயற்சி‐GTN
ஏ 9 வீதிக்கு கிழக்காக கிளிநொச்சி சாந்தபுரத்தில் இருந்து முல்லைத் தீவு வரை 2000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து இந்தியாவில் போராட்டங்கள் நடத்தப்படும் ‐ பழ நெடுமாறன் GTBC.FMற்கு விசேட செவ்வி
http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25403&cat=1
3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
28 July 10 01:10 pm (BST)
| gtbc.fm |
-
18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க இன்று சவப்பெட்டி ஊர்வல ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது
-
2ம் இணைப்பு ‐ இராணுவ கிளர்ச்சி ஓன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது – சர்வாதிகார பாதையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக சிறை செல்லவும் தயார் ‐ சரத்பொன்சேகா
-
18 வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன
-
18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் ‐ படங்கள் இணைப்பு
-
3ஆம் இணைப்பு‐ மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாதது – விஜய் குமார் சிங் ‐ இந்திய இராணுவத் ஜெனரல் விஜேகுமார் சிங், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திப்பு‐
-
உருத்திரபுரம் மீண்டும் உயிர் பெறும் கிராமம்‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்
09 September 10 01:25 am (BST)
பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி 18ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டுமென கூறும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயா கடைசியாக இடம்பெற்ற அவசரகாலச்சட்ட வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை? என்பதை தெளிவுபடுத்துவாரா?
09 September 10 12:22 am (BST)
ரெம்ப குழம்பி போய் இருக்கிறோம்
08 September 10 10:25 pm (BST)
EPRLF இல் என்னக்கு பிடித்தமானது அவர்கள் முஸ்லிம்களை அனுசரித்து தலைவர் அஷ்ராபுடன் சேர்ந்து ஒரு தமிழ் இனமாக வாழ முடியும் என்று சாதித்து காடியவர்கள்



